உலகளாவிய உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே (Nestlé), அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் உலகளவில் 16,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக இன்று (வியாழக்கிழமை, அக்டோபர் 16, 2025) அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் செயல்பாடுகளை சீராக்கி, விற்பனை வளர்ச்சியை இலக்காக கொண்டு, புதிய தலைமைச் செயல் அதிகாரி பிலிப் நவரத்தில் (Philipp Navratil) இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
மொத்தமாக 16,000 பணி நீக்கங்களில்,12,000 White-collar பதவிகள் அடங்கும்.
இந்த பணி நீக்கங்கள் மூலம் நிறுவனம் ஒரு பில்லியன் சுவிஸ் ஃபிராங்க்ஸை சேமிக்க முடியும் என மதிப்பிட்டுள்ளது.
மேலும், 2027 இறுதிக்குள் மொத்த சேமிப்பு இலக்கை 2.5 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க்ஸில் இருந்து 3 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க்ஸாக உயர்த்தியுள்ளது.
Nestle நிறுவனத்தில் உலகளவில் 16,000 ஊழியர்கள் பணி நீக்கம்: புதிய CEO-வின் அதிரடி!
