இந்தியாவின் முதல் மின்சார ஏர் டாக்ஸியை உருவாக்கும் சென்னையை சேர்ந்த start-up  

Estimated read time 1 min read

சென்னையை சேர்ந்த ‘The ePlane Company’, நகர்ப்புற போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ‘e200x’ என்ற மின்சார ஏர் டாக்ஸியை உருவாக்கி வருகிறது.
இந்த விமானத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்ய, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Nvidia உடன் இந்நிறுவனம் கைகோர்த்துள்ளது.
என்விடியாவின் ‘Omniverse’ தளத்தை பயன்படுத்தி, e200x விமானத்தின் மிக துல்லியமான ‘Digital Twin’ உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், நிஜ உலகில் பறப்பதற்கு முன்பே, கோடிக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை மெய்நிகர் சூழலில் இந்த விமானம் கடந்து சோதிக்கப்படுகிறது.
விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் ரேடார்களில் இருந்து வரும் தரவுகளை நொடிப் பொழுதில் ஆய்வு செய்து, சரியான முடிவுகளை எடுக்க என்விடியாவின் ஆன்-போர்டு கம்ப்யூட்டிங் சிஸ்டம் உதவுகிறது.

You May Also Like

More From Author