33ஆவது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் நிதி அமைச்சர்கள் கூட்டம் 21ஆம் நாள் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் நிறைவடைந்தது. சீன நிதி அமைச்சர் லான்ஃபோ ஆன் தலைமை வகித்த இக்கூட்டத்தில் அவரின் தலைமையிலான சீனப் பிரதிநிதிக் குழுவினர் கலந்துகொண்டனர். அதோடு, இவ்வமைப்பின் உறுப்பினர்கள், பார்வையாளர் மற்றும் தொடர்புடைய சர்வதேச அமைப்புகளின் சுமார் 300 பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், உலகளாவிய மற்றும் பிராந்தியப் பொருளாதார நிதி நிலைமை, பொது மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கான நிதி ஆதரவுக் கொள்கை, எண்ணியல் அடிப்படை வசதிக்கான நிதி திரட்டல், இவ்வமைப்பின் இளம் நிதி திறமைசாலிகளின் உரையாடல் முதலியவை விவாதிக்கப்பட்டன.
2026 ஏபெக் நிதி அமைச்சர்கள் கூட்டறிக்கையும் ஆசிய-பிசிபிக் பிரதேசத்தில் எண்ணியல் அடிப்படை வசதிக்கான நிதி திரட்டல் பற்றிய கொள்கை அறிக்கையும் இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஏபெக் பொருளாதாரங்களிடையே நிதி மற்றும் நாணய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு வழிகாட்டியுள்ளன.
