சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 8ஆம் நாளிரவு ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட்டைச் சென்றடைந்து, அந்நாட்டில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
விமான நிலையத்தில் நிகழ்த்திய எழுத்துமூல உரையில், சீனாவும் ஹங்கேரியும் ஒன்றுக்கு ஒன்று நம்பகத்தன்னை வாய்ந்த நல்ல நண்பர்கள் மற்றும் நல்ல கூட்டாளி நாடுகளாகும். கடந்த சில ஆண்டுகளில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான ஒத்துழைப்புக்கு அதிக சாதனைகள் கிடைத்துள்ளன.
ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறும் புதிய ரக சர்வதேச உறவின் சிறந்த மாதிரியாக இரு நாட்டுறவு திகழ்கின்றது. இவ்வாண்டு சீனாவும் ஹங்கேரிக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டு உறவின் வளர்ச்சி முக்கிய வாய்ப்புகளை வரவேற்கின்றது.
இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன் இப்பயணம் முழுமையான வெற்றி பெற்று, நாட்டுறவை மேலும் சிறந்த எதிர்காலத்திற்கு முன்னெடுத்து செல்லும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.