15வது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி துவங்குவதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமமும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் நவம்பர் 9ஆம் நாள் குவாங்சோ நகரில், 2026முதல் 2032ஆம் ஆண்டு வரையிலான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பதிப்புரிமை பற்றிய உடன்படிக்கையில் கையொப்பமிட்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியொங், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் கிறிஸ்டி கோவென்ட்ரி ஆகியோர் இரு தரப்புகளின் சார்பில் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். மேலும், 2026ஆம் ஆண்டு மிலன்-கோர்டினா டி’அம்பெஸ்ஸோ குளிர்கால விளையாட்டுப் போட்டி பற்றிய செய்தி வெளியீட்டுக்கான சீன ஊடகக் குழுமத்தின் லட்சினை வெளியிடப்பட்டது.
