“வெற்றி பெறுபவர்கள் இதைச் செய்வார்களா?” – ஓட்டுப் போட்ட கையோடு ரஜினி கேட்ட அந்த முக்கியமான கேள்வி….!! 

Estimated read time 1 min read

2026-2029 ஆம் ஆண்டிற்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வருபவர்கள், தயாரிப்பாளர்கள் சந்தித்து வரும் நீண்ட காலப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார்கள் என்று நம்புவதாகத் தனது எதிர்பார்ப்பைத் தெரிவித்தார்.

இன்று காலை முதலே தயாரிப்பாளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வரும் நிலையில், மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 6 மணி அளவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, புதிய நிர்வாகிகள் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாக உள்ளன. திரையுலகமே இந்த முடிவுகளை எதிர்நோக்கிப் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author