சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பேட்டி

31வது உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி சீனாவின் செங்து நகரில் துவங்கியது. இதை முன்னிட்டு, சர்வதேச பல்கலைக்கழக விளையாட்டுக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் லியோன்ஸ் எடர் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.
செங்து மக்கள் மற்றும் இப்போட்டியின் ஏற்பாட்டுக்குழுவின் உற்சாகம் மற்றும் முயற்சிக்கு எடர் நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், இது விளையாட்டுப் போட்டி மட்டுமல்லாமல், சிறப்பான பண்பாட்டு மற்றும் கல்வி நிகழ்ச்சியாகவும் திகழ்கிறது. இந்த விளையாட்டுப் போட்டி, இளம் வீரர்களுக்கு மேடையை வழங்குவது மட்டுமல்லாமல், ஒன்றுக்கொன்று பரிமாற்றத்தை வலுப்படுத்தி, உலக ஆற்றலை ஒன்றிணைப்பதற்கும் துணைப் புரியும் என்றார்.

You May Also Like

More From Author