மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் தலைவன் ‘எல் மெஞ்சோ’ கொலை: பற்றி எரியும் மாகாணங்கள்!  

Estimated read time 1 min read

மெக்சிகோவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல் தலைவனான ‘எல் மெஞ்சோ’ (El Mencho) என அழைக்கப்படும் நெமேசியோ ஒசெகுவேரா, அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, மெக்சிகோவின் பல மாகாணங்களில் வன்முறை வெடித்துள்ளதால், அங்குள்ள இந்தியக் குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மெக்சிகோவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஜாலிஸ்கோ பகுதியில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் பலத்த காயமடைந்த எல் மெஞ்சோ, சிகிச்சைக்காக மெக்சிகோ சிட்டிக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
உலகின் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான இவரது மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கில், அவரது ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ (CJNG) கும்பலைச் சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலைகளை முடக்கியும், வாகனங்கள் மற்றும் கடைகளுக்குத் தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

You May Also Like

More From Author