ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்டவர்கள் இனி YouTube சேனல்களை நடத்தத் தடை விதித்துள்ளது.
இந்தப் புதிய விதி டிசம்பர் முதல் அமலுக்கு வரும். TikTok, Instagram மற்றும் Snapchat போன்ற சமூக ஊடக தளங்களிலும் ஆஸ்திரேலியா ஏற்கனவே இதே போன்ற விதிகளை அமல்படுத்தி வருகிறது.
டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பு தனது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ள பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.