நிலவுக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில் தாமதமா?  

Estimated read time 1 min read

இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணத் திட்டமான ‘ககன்யான்’ (Gaganyaan), பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த தனது முதற்கட்ட ஆளில்லா சோதனை ஓட்டத்தில் (G1) சிறு காலதாமதத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சோதனையின் போது விண்கலத்தை கண்காணிக்க அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தை பயன்படுத்த இஸ்ரோ அனுமதி கோரியிருந்தது.
ஆனால், ஜனவரி 12 அன்று அந்த விண்ணப்பம் திடீரென திரும்ப பெறப்பட்டது, விண்வெளி ஆர்வலர்களிடையே பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது.
சமீபத்தில் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி62 (PSLV-C62) ஏவுகணை தோல்வியடைந்த நிலையில், இந்தப் பின்வாங்கல் நிகழ்ந்துள்ளது.
இருப்பினும், PSLV தோல்விக்கும் ககன்யான் திட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இஸ்ரோ தெளிவுபடுத்தியுள்ளது.

You May Also Like

More From Author