இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் பொற்கோவிலில் வழிபாடு..!

Estimated read time 0 min read

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (டிசம்பர் 17) தமிழகம் வருகை தர உள்ளார். தனது பயணத்தின் ஒரு பகுதியாக, வேலூர் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொற்கோவிலில் அவர் வழிபாடு மேற்கொள்ள உள்ளார். இதனால் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. முக்கியமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும் மற்றும் ஸ்ரீபுரம் கோவிலின் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர பாதுகாப்பும் அமைக்கப்பட்டுள்ளது.

முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் சிசிடிவி கேமராகள் பொருத்தப்பட்டும் மற்றும் கண்காணிப்பும் அதிகளவில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் செய்து வருகின்றன.

பொற்கோவில் வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்கள் நுழைவுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் வருகை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author