570 கோடி யுவானுக்கு மேல் வசந்த விழாக்கால திரைப்பட வசூல்

சீனத் தேசிய திரைப்படப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டு சீனாவின் வசந்த விழாவின் போது, சீனத் தேசியளவிலான திரைப்பட வசூல் 572 கோடியே 20 இலட்சம் யுவானைத் தாண்டியுள்ளது.

திரைப்படச் சீட்டின் சராசரி விலை சுமார் 6 விழுக்காடு குறைந்து, மொத்தமாக 12 கோடி பார்வையாளர்கள் திரையரங்குகளில் திரைப்படங்களை ரசித்தனர். இவ்விழா காலகட்டத்தில்  பல்வேறு திரைப்படங்கள் 43 இலட்சத்து 50 ஆயிரம் முறை காண்பிக்கப்பட்டு, வசந்த விழாக்கால திரையிடலின் வரலாற்று பதிவைப் படைத்துள்ளது.

சுறுசுறுப்பான வசந்த விழா திரைப்பட சந்தையுடன் இணைந்து, இவ்வாண்டு இது வரை சீனத் திரைப்படங்களின் மொத்த வசூல் 900 கோடி யுவானை எட்டி, உலகளாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், வெளிநாடுகளில் 28 நாடுகளில் 600 பொது பெரிய திரைகளில் சீனத் திரைப்படங்களுடன் பயணம் மேற்கொள்வது என்ற தலைப்பில் சிறப்பு விளம்பர நடவடிக்கைகளை சீனத் தேசிய திரைப்படப் பணியகமும், சீன ஊடகக் குழுமும் இணைந்து மேற்கொண்டன. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம், உலகளாவிய மேலதிகமான ரசிகர்களை அழைத்து தனிச்சிறப்பு வாய்ந்த சீன வசந்த விழா பண்பாடுகளை கூட்டாக அனுபவிப்பது  என்பது இதன் நோக்கமாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author