சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினர்கள், செயலகத்தின் செயலாளர், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி, அரசவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் கமிட்டியின் கம்யூனிஸ்ட் கட்சி குழு உறுப்பினர்கள், உச்ச மக்கள் நீதி மன்றம் மற்றும் உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் கட்சி கமிட்டிச் செயலார்கள் முதலியோர், அண்மையில் 2025ம் ஆண்டின் பணிகள் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கிற்கு எழுத்து மூலம் பணியறிக்கைகளை வழங்கினர்.
பணியறிக்கையைப் பார்த்த ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட 105ஆவது ஆண்டு நிறைவும், 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டும் ஆகும் என்பதை நினைவுகூர்ந்தார். மேலும், மத்திய கமிட்டியின் முடிவு மற்றும் திட்டங்களை நடைமுறை மூலம் செயல்படுத்தி, உயர்தர வளர்ச்சியை முன்னெடுத்து, மக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து மேம்படுத்தி, சமூக நல்லிணக்கம் மற்றும் நிதானத்தை நிலைநிறுத்த வேண்டும் எனக் கூறியதோடு, நல்ல ஆளுகைச் செயல்திறன் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு, நடைமுறைப்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையையும் அவர் விடுத்தார்.
