சீன மத்திய கிராமப்புறப் பணிக் கூட்டம் டிசம்பர் 17, 18 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய பொருளாதாரப் பணிக் கூட்டத்தின் முக்கிய அம்சங்கள் செயல்படுத்தப்பட்டு, தற்போது வேளாண் துறை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகள் தொடர்பான பணியின் நிலைமை மற்றும் அறைகூவல் ஆராயப்பட்டு, 2025ஆம் ஆண்டிற்கான தொடர்புடைய பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், வேளாண் துறை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகள் தொடர்பான பணிகளைச் செவ்வனே செய்வது குறித்து முக்கிய கட்டளையிட்டார். அவர் கூறுகையில், 2024ஆம் ஆண்டு சீனாவின் தானிய உற்பத்தி, புதிய கட்டத்தில் காலடி எடுத்து வைத்து, விவசாயிகளின் வருமானம் நிதானமாக அதிகரித்து, கிராமப்புறச் சமூகம் இணக்கமாகவும், நிதானமாகவும் இருக்கிறது. இது சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் உயர் தர வளர்ச்சிக்கு அடிப்படை ரீதியிலான ஆதரவு அளித்துள்ளது என்றார்.
2025ஆம் ஆண்டுக்கான தொடர்புடைய பணிகளைச் செவ்வனே செய்யும் வகையில், கிராமப்புற சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்கி, கிராமிய மறுமலர்ச்சியை பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும். உயர் வரையறை கொண்ட வேளாண் வயல்களின் கட்டுமானத்தை உயர் தரத்துடன் முன்னேற்றி, வேளாண் துறை அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சாதனங்களின் ஆதரவை வலுப்படுத்தி, தானியம் உள்ளிட்ட முக்கிய வேளாண் பொருட்களின் விளைச்சல் மற்றும் வினியோகத்தை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
