சீன-ஜார்ஜியா தூதாண்மை உறவு உயர்வு

சீன-ஜார்ஜியா தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 34ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜார்ஜிய அரசுத் தலைவர் கவிலாஷ்விலி இருவர் ஜூன் 9ஆம் நாள் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் செய்தியை அனுப்பினர்.

கடந்த 34 ஆண்டுகளில், பரஸ்பர மதிப்பு மற்றும் நம்பிக்கை, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுதல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில், இரு தரப்புறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ந்து, பல்வேறு துறைகளில் ஏராளமான சாதனைகளைப் பெற்றுள்ளது என்றும், சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், உத்தி மற்றும் நெடு நோக்கு பார்வையில் ஜார்ஜியாவுடனான உறவை சீனா பேணி வருகின்றது என்றும் ஷி ச்சின்பிங் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

இரு நாட்டுறவை பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவாக உயர்த்துவதாக இரு தலைவர்களும் கூட்டாக நிர்ணயித்துள்ளனர்.

You May Also Like

More From Author