அமெரிக்காவின் குறிப்பிட்ட சில பொருட்களுக்குக் கூடுதல் வரி வசூலிக்க சீனா முடிவு

 

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பொருட்கள் மீது கூடுதலான சுங்க வரி வசூலிக்கவுள்ளதாகச் சீன அரசவையின் சுங்க வரி ஆணையம் பிப்ரவரி 4ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, வரும் பிப்ரவரி 10ஆம் நாள் முதல், நிலக்கரி, திரவ இயற்கை எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் மீது கூடுதலாக 15 விழுக்காட்டு வரியும், கச்சா எண்ணெய், விவசாய இயந்திரம், பெரிய எஞ்சினைக் கொண்ட வாகனம்,  பிக்கப் டிரக் உள்ளிட்ட தயாரிப்புகள் மீது கூடுதலாக 10 விழுக்காடு வரியும் வசூலிக்கப்படும்.

ஃபென்டானில் தொடர்பான பிரச்சினையைக் காரணமாகக் கொண்டு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் கூடுதலாக 10 விழுக்காட்டு வரி வசூலிக்கவுள்ளதாக அமெரிக்க அரசு பிப்ரவரி 1ஆம் நாள் அறிவித்தது.

அமெரிக்காவின் ஒருதலைச் சார்பாக சுங்க வரியை வசூலிப்பது போன்ற செயல்பாடு, உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறியுள்ளதோடு, சீன-அமெரிக்க வர்த்தக ஒத்துழைப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சீனச் சுங்க வரி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சீன மக்கள் குடியரின் சுங்க வரி சட்டம், சுங்கத் துறை சட்டம் வெளிநாட்டு வர்த்தக சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுக்கு சீன அரசவை அங்கீகாரம் அளித்துள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author