ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து நேற்று அந்நாட்டின் மீது திடீர் தாக்குதலைத் தொடங்கியது.
ஈரானின் முக்கியப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதலால் வளைகுடாப் பிராந்தியம் முழுவதும் கடும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதனை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கமேனியின் மறைவையொட்டி ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், ஒரு வாரத்திற்குப் பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
போர் சூழல் நிலவுவதால், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் மற்றும் அங்குள்ளவர்களின் உறவினர்கள் தொடர்புகொள்ள வசதியாக, தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் சார்பில் அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி
புதுடெல்லி கட்டுப்பாட்டு அறை:
-
தொலைபேசி: 011-24193300
-
வாட்ஸ்அப் எண்: 92895 16712
அயலகத் தமிழர் நலத்துறை:
-
இந்தியாவிற்குள்: 1800 309 3793 (கட்டணமில்லா எண்)
-
வெளிநாட்டிலிருந்து: +91 80 6900 9900 (மிஸ்டு கால் மட்டும்)
-
நேரடித் தொடர்புக்கு: +91 80 6900 9901
மேற்கண்ட எண்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தகவல்கள் தேவைப்படுவோர் உடனடியாக உதவி பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
