நகை பிரியர்கள் ஷாக்…மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

Estimated read time 1 min read

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 15) மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால் நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.14,320-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,560-க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,220-க்கும், சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,760-க்கும் விற்கப்பட்டது. இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.11,940-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.95,520-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்கப்படுகிறது.தொடர்ந்து ஏப்ரல் மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.

உலக சந்தை நிலவரம், அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் புவியியல் அரசியல் பதற்றங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து மாறுபாட்டுக்கு உள்ளாகி வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.தங்கம் மற்றும் வெள்ளி விலை தினசரி அடிப்படையில் மாறுபடுவதால், நகை வாங்குவதற்கு முன் சமீபத்திய விலை நிலவரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author