புதுச்சேரியில் 11 மின் பேருந்துகளின் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தவும், மின்சாரப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும், பிரதமரின் இ-பஸ் சேவா திட்டம் மூலம் நாடு முழுவதும் 10 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பிரதமர் இ-பஸ் சேவா திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக, ஈகா மொபைலிட்டி நிறுவனத்தில் இருந்து 11 மின் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், 9 மீட்டர் நீளம் கொண்ட 11 மின் பேருந்துகளின் சேவையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
