சுங்கத்துறை வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் பாதியில் சீனாவின் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 25.47 லட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட 16.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு கடந்த ஆண்டை விட முறையே 13.4 சதவீதம் மற்றும் 22.1 சதவீதம் அதிகமாகும்.
முதல் 6 மாதங்களில், சீனாவின் இயந்திர மற்றும் மின் தயாரிப்புகளின் ஏற்றுமதி மதிப்பு 9.36 லட்சம் கோடி யுவானை எட்டியது. இது மொத்த ஏற்றுமதி மதிப்பில் 63.5 சதவீதத்தை வகிக்கிறது. உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளின் ஏற்றுமதி மதிப்பு 3.26 லட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட 39 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், இக்காலத்தில் சீனாவின் இறக்குமதி வளர்ச்சி ஏற்றுமதியை விட 8.7 சதவீதப் புள்ளிகள் அதிகமாகும். ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான சரிசமமான வளர்ச்சியை இது ஊக்குவித்துள்ளது.
