“தமிழ்நாட்டின் நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்”- பிரதமர் மோடி

Estimated read time 1 min read

மதுரையில் ரூ.4,400 கோடி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “புனித மதுரை மாநகருக்கு வந்திருப்பதால் பெருமைப்படுகிறேன். மதுரைக்கு வருவதை பெரும் கெளரவமாக கருதுகிறேன். மரக்காணம்- புதுச்சேரி 4 வழிச்சாலை கடலோர சுற்றுலா மேம்பட உதவிடும். ரூ.1853 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்ட பரமக்குடி- ராமநாதபுரம் 4 வழிச்சாலை ராமேஸ்வரம், தனுஷ்கோடி பயண நேர்த்தை குறைக்கும். பாம்பன் புதிய தூக்கு ரயில் பாலம் பொறியியல் துறையின் அடையாளம். பாஜக ஆட்சியில் ரயில்வேக்கு ஒரே ஆண்டில் ரூ.7600 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் வெறும் ரூ.880 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் 1,300 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 9 வந்தே பாரத், 9 அம்ரித் பாரத் ரயில்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம். தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் நவீனமாக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறையில் வரலாற்று சிறப்பு மிக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. ’மேக் இன் இந்தியா’ தொலைநோக்கு தர்சார்பினை ஊக்கப்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தருகிறது. தமிநாட்டின் உட்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு 10 ஆண்டுகளைவிட 3 மடங்காக உயர்ந்துள்ளது” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author