ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு 93.9 விழுக்காட்டினர் கண்டனம்: கருத்து கணிப்பு

அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், 93.9 விழுக்காட்டினர் இத்தாக்குதலைக் கண்டித்ததோடு,  பதற்ற நிலைமை தீவிரமடைவதை தவிர்ப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

ஈரானுடனான பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா இராணுவத் அச்சுறுத்துதலை வலுப்படுத்துவது அமெரிக்க மேலாதிக்கத்தை காட்டியது என்று 86.8 விழுக்காட்டினர் விமர்சித்தனர். மேலும், சர்வதேச சட்டங்களையும் உறவுகளின் விதிமுறைகளையும் புறக்கணிக்கும் அமெரிக்காவின் மேலாதிக்க செயலும் தீவிரமாகியுள்ளது என்றும், இது பலதரப்பு அமைப்பு முறை மீதான சர்வதேச நம்பிக்கையை பலவீனப்படுத்தி, உலகளாவிய உத்திநோக்கு நிலைத்தன்மையை சீர்குலைக்கும் என்றும் 94.7 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

 

You May Also Like

More From Author