2024ஆம் ஆண்டு பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி நிலைமை பற்றிய பரிசீலனை

சீன அரசவை முன்மொழிந்த 2024ஆம் ஆண்டு சீன பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்திய நிலைமையும் 2025ஆம் ஆண்டு சீன பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி திட்டமும் பற்றிய அறிக்கை 14ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடரில் பரிசீலனை செய்யப்பட்டது.

2024ஆம் ஆண்டின் திட்டம் சீராக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் பல்வேறு இலக்குகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன. உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 5 விழுக்காடு அதிகரித்தது. நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் 1 கோடியே 25 இலட்சத்து 60 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அரசவை முன்மொழிந்த 2025ஆம் ஆண்டின் திட்டம், சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது தேசிய மாநாட்டின் எழுச்சிக்கும் மத்திய கமிட்டியின் பொருளாதார பரவல் பணிக்கும் பொருந்தியது என்று சீன தேசிய மக்கள் பேரவையின் நிதி மற்றும் பொருளாதார ஆணையம் கருத்து தெரிவித்தது.

You May Also Like

More From Author