இந்த ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த பங்களிப்புக்கான விருது பாடகர் யேசுதாஸுக்கு கிடைக்கவிருக்கிறது . இந்த விருதை பிரதமர் சங்க்ரஹாலயா, டெல்லி மற்றும் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. பிப்ரவரி 20, 2024 அன்று மும்பை தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஹோட்டலில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும் என்று திரைப்பட விழாவின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் மிஸ்ரா அறிவித்தார். இதனிடையே தேசிய திரைப்பட விருதுடன் தாதா சாகிப் பால்கே விருதையும் யேசுதாஸ் பெற்றதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
