14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 6ஆம் நாள் பொருளாதாரம் குறித்து செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. இவ்வாண்டின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை நனவாக்குவதற்கு சீனா உறுதியான அடிப்படையைக் கொண்டுள்ளதாகச் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் இயக்குநர் ட்சென்ஷேன்ஜியெ கூறினார். இந்தப் பொருளாதார வளர்ச்சி முக்கியமாக 3 துறைகளிலிருந்து ஆதாரங்களைப் பெற முடியும். முதலாவது, 2025ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 140லட்சம் கோடி யுவானைத் தாண்டியது. இரண்டாவது, உலகக் கவனத்தை ஈர்க்கும் புத்தாக்க சாதனைகள் மற்றும் முக்கிய முன்னேற்றங்களைச் சீனா படைத்துள்ளது. மூன்றாவது, பல்வேறு தரப்புகளிலிருந்து வரும் இடர்பாடுகளை நெகிழ்வு மற்றும் பயனுடன் கூடிய முறையில் சமாளிக்கும் திறன்களைச் சீனா கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
சீனப் பொருளாதர வளர்ச்சி இலக்குகளின் நனவாக்கத்துக்கு உறுதியான அடிப்படை
Estimated read time
0 min read
You May Also Like
குடும்பத்தினர் போன்ற சீன-வியாட்நாம் உறவு
June 27, 2023
அதிகாரிகள் பொறுப்பை நடைமுறைப்படுத்துவது பற்றிய கூட்டம் நடைபெற்றது
February 24, 2026
