9 ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி 2025ஆம் ஆண்டின் பிப்ரவரி 7ஆம் நாள் துவங்கவுள்ளது. ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகள் இறுதி கட்டத்திற்குள் நுழைந்துள்ளன.
இப்போட்டிக்கான காலம் நெருங்குவதை அடுத்து, ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் அதிகாரப்பூர்வ நுழைவுச்சீட்டு வலைத்தளம் மற்றும் செயலி ஆகியவை இணையவழியில் சோதனை செய்யப்பட்டுள்ளன. அனைத்து போட்டிக்கான நுழைவுச்சீட்டுகளையும் உரிய நபர்கள் மட்டுமே வாங்குவது போன்ற அமைப்புமுறையும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி நடக்கவுள்ள ஹார்பின் நகரில் ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிக்கான சூழ்நிலை மேலும் வலுவடைந்துள்ளது. முக்கிய தெருக்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி தொடர்பான பல்வேறு கூறுகள் காணப்படுகின்றன. இந்நகரின் பனிச் சுற்றுலா காட்சிகளும் அழகாக மாறியுள்ளன.