ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இடத்திற்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை அந்நாட்டின் நிபுணர்கள் குழு நிறைவு செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அன்று வெளியான தகவல்களின்படி, தகுதியான ஒருவரைப் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துவிட்டதாக மூத்த மதகுரு மொஹ்சென் ஹைதாரி அலேகாசிர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் புதிய தலைவரின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஈரானின் அடுத்த உச்ச தலைவர் யார்? ரகசியமாகத் தேர்வு செய்த நிபுணர்கள் குழு
