சீன-அமெரிக்க உறவு குறித்து அமெரிக்கர்களின் கருத்து

Estimated read time 1 min read

14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரில் தூதாண்மை தலைப்பிலான செய்தியாளர் கூட்டம் மார்ச் 8ஆம் நாள் நடைபெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ அதில் சீன-அமெரிக்க உறவு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.

அப்போது வாங்யீ கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும் பெரிய நாடுகளாகும். இரு நாடுகள் ஒன்றை ஒன்று மாற்ற முடியாது. ஆனால், ஒன்றுடன் ஒன்று பழகும் வழிமுறையை மாற்றி ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி பெறும் எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபட முடியும் என்றார்.

அண்மையில் 2001 அமெரிக்கர்களிடம் சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. சீனாவுடன் சீரான உறவை நிலைப்படுத்துவது மிக முக்கியமானது என்று அதில் 83.1விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

மேலும், சீன-அமெரிக்க உறவின் சுமுகமான வளர்ச்சி குறித்து 60.6விழுக்காட்டினர் நம்பிக்கையைக் கொண்டுள்ளதாகக் கூறினர். சீனாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்கா நலனைப் பெற்றுள்ளதாக 67.7விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author