14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் நாள் சீன தூதாண்மை பணி குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது.
இதில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறுகையில்,
கடந்த ஆகஸ்ட் திங்களில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சீனாவின் டியன்ஜின் மாநகரில் இந்திய தலைமை அமைச்சர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டுறவு வளர்ச்சிக்கு இது வழிகாட்டியது. இருதரப்பும், இரு நாட்டு தலைவர்களின் ஒத்த கருத்துகளை நடைமுறைப்படுத்தின. இரு நாட்டு பல்வேறு நிலை தொடர்பு வலுப்படுத்தியது. இருதரப்பு வர்த்தகம் புதிய உயர்வான பதிவை உருவாக்கியது. மனித பண்பாட்டு தொடர்பு சுறுசுறுப்பானது. இவை இரு நாட்டு மக்களுக்கு நன்மை படைத்துள்ளன. இரு நாடுகளின் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையும் ஒத்துழைப்பும் கூட்டு வளர்ச்சிக்கு துணை புரியும். போட்டியிடுவது, ஆசிய செழுமைக்கு துணை புரியாது. இரு நாட்டு தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துகளைப் பின்பற்றி, ஒரே திசையை நோக்கி இரு நாடுகள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
