உள்ளூர் நேரப்படி ஜூன் 23ஆம் நாளில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் ஒப்படைப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு, சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹைய்சியோங், ஸ்விட்ஸர்லாந்தில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் வாழ்நாள் கௌரவ தலைவர் தாமஸ் பாச், புதிதாக பதவி ஏற்றுள்ள தலைவர் கோவென்ட்ரி ஆகிய இருவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்தி, புதிய ரக போட்டி ஒளிபரப்பு முதலியவை குறித்து இரு தரப்பினரும் ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர்.
புதிய யுகத்தில் சீனாவின் உயர் தர வளர்ச்சி, புதிய ரக விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாடு மற்றும் பரவலுக்கு வாய்ப்புகளைக் கொண்டு வரும். விளையாட்டு பரவல் துறை மற்றும் இ-ஸ்போர்ட தொழில் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் பயன்பாடு குறித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து விவாதிக்க சி.எம்.ஜி விரும்புகிறது. கூட்டு நம்பிக்கை மற்றும் நன்மை தரும் அடிப்படையில், ஒலிம்பிக் விளையாட்டில் உற்சாகத்தை பரவல் செய்ய பாடுபடுவோம் என்று சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹைய்சியோங் தெரிவித்தார்.