இந்திய அணுசக்தி துறையில் வரலாற்றுச் சாதனை: முதல் பெண் தலைவராக ஆர்.எம்.நாச்சம்மை நியமனம்  

Estimated read time 0 min read

இந்தியாவின் அணுசக்தித் திட்ட வரலாற்றில் ஒரு மகத்தான தருணமாக, செயல்பாட்டில் உள்ள ஒரு அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளைக் கவனிக்கும் முதல் பெண் தலைமை கண்காணிப்பாளராக ஆர்.எம்.நாச்சம்மை நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணுமின் கழகத்தின் கீழ் இயங்கும் இந்த உயரிய பொறுப்புக்கு ஒரு பெண் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
மார்ச் 15 முதல் அமலுக்கு வரும் இந்த நியமனத்தின்படி, கர்நாடகாவின் கைகா அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4 ஆகிய அலகுகளின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்கிறார்.
அணுமின் நிலையத்தின் செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் பொறியியல் ஆதரவு ஆகிய முக்கியப் பிரிவுகளை இவர் வழிநடத்துவார்.
24 மணிநேரமும் அணு உலைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டைக் கண்காணிக்கும் முக்கிய பொறுப்புக்கு அவர் தலைமையேற்பது பெண்சக்தியின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author