பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்த சீனாவின் வீரர்களை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்தார். அப்போது அவர் உரைநிகழ்த்தியபோது, சீனாவை ஒரு விளையாட்டு வல்லரசு நாடாக உருவாக்க விளையாட்டு வீரர்களை மேலும் முயற்சி செய்ய வேண்டும் என்று ஊக்கமளித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சீன ஒலிம்பியன்களின் செயல்திறனை அவர் பாராட்டியதுடன், அவர்கள் நாட்டிற்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.