அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு 4 தொகுதிகள்?

Estimated read time 0 min read

புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டிருப்பதால் நான்கு தொகுதிகள் தருவார்கள் என எதிர்பார்ப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தி.மு.க கூட்டணி உடைய போகிறது- ஜெகன் மூர்த்தி பரபரப்பு பேட்டி

புரட்சி பாரதம் கட்சியின் 48வது ஆண்டு துவக்க விழா வருகின்ற 8ம் தேதி திருவள்ளூர் அடுத்த வேடங்கிநல்லூரில் நடைபெற உள்ளதை ஓட்டி நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த பூவை ஜெகன் மூர்த்தி, “வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டிருப்பதால் அவை எந்த தொகுதி என்பது குறித்து அடுத்து வாரம் கூட்டணி கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து தொகுதிகள் பட்டியல் அளிக்க உள்ளோம். அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டிருப்பதால் நான்கு தொகுதிகள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தபின் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

விஜய் அதிமுக பற்றி விமர்சனம் செய்து வருவதை அதன் தலைவர்கள் தொடர்ந்து அவருக்கு பதில் அளித்து வருகிறது. தமிழகத்தில் இந்தி திணைப்புக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடத்தி பலபேர் தீக்குளித்தும் உயிரை மாய்த்துக் கொண்டும் உள்ளது. இந்தி மொழியை தமிழகத்தில் திணிக்க கூடாது விருப்பப்பட்டவர்கள் படிக்கலாம்” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author