லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கார்கில் போரின் போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
போர் விதவைகளுடன் பேசவும், ஷின்குன் லா சுரங்க திட்டத்தின் முதல் குண்டுவெடிப்பை நடைமுறைப்படுத்தவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பேசியுள்ள பிரதமர் மோடி, ஜூலை 26ஆம் தேதி அனுசரிக்கப்படும் கார்கில் விஜய் திவாஸ், ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் சிறப்பான நாளாகும் என்று கூறினார்.
“நமது தேசத்தை பாதுகாக்கும் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் நாள் இது. ஷின்குன் லா சுரங்க திட்டத்திற்கான பணிகளும் இன்று தொடங்கப்படும்.” என்று பிரதமர் மோடி கூறினார்.