’96 மற்றும் மெய்யழகன் போன்ற உணர்வுபூர்வமான படங்களுக்கு பெயர்பெற்ற இயக்குனரான பிரேம் குமார், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார்.
இந்த படமும் உணர்ச்சிகளை பேசும் அதே நேரத்தில் ஒரு அதிரடி த்ரில்லர் படமாக இருக்கும் என அவர் ‘நீயா நானா’ கோபிநாத் உடன் நடந்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த படம் பற்றி பேசிய பிரேம், ஸ்கிரிப்ட்டின் 45 நிமிட பகுதியை ஃபஹத்திற்கு விவரித்ததாகவும், அது அவரை மிகவும் கவர்ந்ததாகவும் கூறினார்.
அதே நேரத்தில் 96 இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாகவும் அவர் கூறியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு காரணம், இயக்குனருக்கும், நடிகர் விஜய் சேதுபதிக்குமான கதை முரண்பாடு எனவும் செய்திகள் கூறியது.
96 இரண்டாம் பாகம் கைவிடப்பட்டது, ஃபஹத் பாசிலுடன் படம்:இயக்குனர் பிரேம் குமாரின் லைன்-அப்ஸ்
