பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கன் அகதிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 35 ஆயிரத்து 152-ஐ எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் ஆயிரத்து 634 ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றதிலிருந்து, அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமான மக்கள் அகதிகளாக வெளியேறி, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதன்மூலம் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிய அகதிகளின் எண்ணிக்கை சுமார் 17 இலட்சமாக உயர்ந்தது. இந்தநிலையில் சமீப காலமாக பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு தலிபான்களுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்புகள் தான் காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.
ஆப்கானிஸ்தான் அகதிகளின் சட்டவிரோத குடியேற்றங்களால், நாட்டில் தீவிரவாதம் அதிகரித்து வருவதாக கூறி, ஆப்கன் அகதிகளைப் பாகிஸ்தான் வெளியேற்றி வருகிறது.
இதுவரை பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கன் அகதிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 35 ஆயிரத்து 152-ஐ எட்டியுள்ளது. ஞாயிற்றுகிழமை ஒரு நாள் மட்டும ஆயிரத்து 634 ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளது.