சீன நீர்வள அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட 2024ம் ஆண்டு நீர் சிக்கன அறிக்கையில், நாடளவில் நீர் சிக்கன பணி தெளிவான சாதனைகளைப் பெற்றுள்ளது என்று காட்டப்பட்டது.
2024ம் ஆண்டில், தேசிய நீர் பயன்பாட்டு அளவு, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 215 கோடி கனமீட்டர் அதிகரித்தது. பத்தாயிரம் யுவான் தேசிய உள்நாட்டு உற்பத்தி மதிப்பு மற்றும் தொழில் துறையில் 10ஆயிரம் யுவான் கூடுதல் மதிப்புக்கான நீர் பயன்பாட்டு அளவு, 2023ம் ஆண்டில் இருந்ததை விட முறையே 4.4 மற்றும் 5.3 விழுக்காடு குறைந்தன. இதற்கிடையில் வேளாண் துறையில் நீர் பயன்பாடு, 2023ம் ஆண்டை விட 240 கோடி கனமீட்டர் குறைந்த வேளையில், பாசன பரப்பளவு 10.9 இலட்சம் ஹெக்டர் அதிகரித்தது. அனல் மற்றும் அணு மின் தொழில் வெப்ப தணிவுக்கான நீர் அளவு, முந்தைய ஆண்டை விட 125கோடி கனமீட்டர் குறைந்தது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.