அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு? – வைகோ விமர்சனம்!

Estimated read time 0 min read

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முயற்சித்தது உண்மை என்றால், அதை விட அரசியல் மோசடி இருக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 27 ஆம் தேதி மதிமுக பொதுக்குழு கூடுவதாகம் அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

முதல்வர் விஜயின் சட்டமன்ற பேச்சு மற்றும் செய்கை குறித்த கேள்விக்கு, சில மாதங்களில் அவர் கற்று தேர்வார். தெளிவு பெற்றுவிடுவார் என் நம்புவதாக தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என பேசியது மற்றும் விமர்சனம் குறித்த கேள்விக்கு,எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவது அதைப்பற்றி நான் கமெண்ட் அடிக்க முடியுமா என்றும். அதைப் போலத்தான் அவர் பேசுவதையும் கமெண்ட் செய்ய விரும்பவில்லை என்றும் அவர் பதில் அளித்தார்.

You May Also Like

More From Author