ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் இந்திய சரக்குக் கப்பல்களை இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணித்து பாதுகாத்து வருகிறது.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் ஓமன் கடற்கரை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ‘ஆபரேஷன் சங்கல்ப்’ திட்டத்தின் கீழ், இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை இவை உறுதி செய்கின்றன.
சமீபத்தில், ‘ஷிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ ஆகிய இந்திய எல்பிஜி (LPG) டேங்கர் கப்பல்கள் இந்தியக் கடற்படையின் பாதுகாப்புடன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்து குஜராத் துறைமுகங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
இந்தியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்திய கடற்படை
