செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள்  

Estimated read time 1 min read

செவ்வாய் கிரகத்தில் தேனீக்கள் மற்றும் ஊர்வன போன்ற உயிரினங்கள் இருப்பதாக வல்லுநர் ஒருவர் கூறும் நிலையில், உண்மை நிலவரம் என்ன?
ஒஹாயோ பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் வல்லுநர் டாக்டர் வில்லியம் ரோமோசர், நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அனுப்பிய புகைப்படங்களை ஆய்வு செய்து, அதில் பூச்சிகள் மற்றும் ஊர்வன போன்ற வடிவங்கள் காணப்படுவதாக வாதிடுகிறார்.
பெரும்பாலான விண்வெளி ஆய்வாளர்கள் இந்தக் கருத்தை ஏற்கவில்லை.
மனித மூளை சீரற்ற வடிவங்கள் அல்லது நிழல்களில் தனக்கு தெரிந்த மனித முகம் அல்லது விலங்குகளின் உருவங்களை கற்பனை செய்துகொள்ளும்.
இந்த உளவியல் நிலைக்கு ‘பெரிடோலியா’ என்று பெயர். செவ்வாய் கிரகத்தில் தெரிபவை பாறை அமைப்புகளே தவிர உயிரினங்கள் அல்ல என்று அவர்கள் விளக்குகின்றனர்.

You May Also Like

More From Author