சீனாவின் புதிய தயாரிப்புகள் உலகளவில் வரவேற்கப்படுவது பற்றிய கருத்து கணிப்பு

 

தற்போது, இயந்திர மனிதன், செயற்கை நுண்ணறிவு, புத்தாக்க மருந்துகள் ஆகியவை, சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் புதிய மேம்பாடுகளாக மாறி வருகின்றன. இது குறித்து சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என்.தொலைக்காட்சி நிலையம் நடத்திய ஒரு இணைய கருத்து கணிப்பில், இந்த மூன்று துறைகளில் சீனாவின் தயாரிப்புகளின் விரைவான வளர்ச்சியானது, சீனத் தயாரிப்புகள் சர்வதேச சந்தைக்கு அசல் தொழில்நுட்பங்கள் நுண்ணறிவு அமைப்புமுறை மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை வழங்குகின்றன என்பதை காட்டியுள்ளதாக 93.1சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இயந்திர மனிதன், செயற்கை நுண்ணறிவு, புத்தாக்க மருந்துகள் ஆகிய துறைகளில், சீனாவின் சக்திவாய்ந்த உற்பத்தி திறன் மீண்டும் வெளிப்படுத்தப்படுவதாக  87.7சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சீன உற்பத்தியின் சாதகம் அதன் உற்பத்தித் திறனில் மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் தொழில்துறை தரநிலைகளை வரையறுக்கும் திறன், உலகளாவிய வளங்களை ஒருங்கிணைத்தல், மற்றும் தொடர்ச்சியாகப் புத்தாக்கத்தையும் தொழில்துறை மேம்பாட்டையும் முன்னெடுத்துச் செல்லும் திறனிலும் உள்ளது என்று 87.2சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

You May Also Like

More From Author