மோந்தா புயல் ஆந்திராவில் இன்றிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு தெற்கு தென்கிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் ‘மோந்தா’ புயல் நிலை கொண்டுள்ளது. காக்கிநாடாவிலிருந்து 180 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவிலும் மோந்தா புயல் கொண்டுள்ளது.
மோந்தா புயல் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை அல்லது இரவு தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இன்று மாலை துவங்கி இரவுக்குள் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது சுமார் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
