ஏர் இந்தியா ஊழியர்கள் நிறுவன கொள்கையை தவறாகப் பயன்படுத்தியது கண்டுபிடிப்பு  

Estimated read time 1 min read

ஏர் இந்தியா நிறுவனத்தின் ‘பணியாளர் பயணக் கொள்கையை’ (Employee Leisure Travel Policy) சுமார் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தவறாகப் பயன்படுத்தியது அந்நிறுவனத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏர் இந்தியா ஊழியர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு (தாய், தந்தை, மனைவி) ஆண்டுக்கு 14 இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.
ஆனால், பல ஊழியர்கள் உறவினர்கள் அல்லாதவர்களைத் தங்களது உறவினர்கள் எனக் கூறி, அந்த இலவச டிக்கெட்டுகளை வெளிநபர்களுக்குப் பணத்திற்காக விற்று லாபம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author