அழிவா அல்லது ஆதரவா? இஸ்ரேல் போர் விமானங்களில் இருந்து ஆயிரக்கணக்கான காகிதங்களை கொட்டியது ஏன்? பின்னணியில் உள்ள ரகசியம்.. கலக்கத்தில் மக்கள்..!! 

Estimated read time 1 min read

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனான் நாட்டில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ஒரு வினோதமான நடவடிக்கை உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல், தற்போது அங்குள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் விமானம் மூலம் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை கொட்டி வருகிறது.

அந்தப் பிரசுரங்களில், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக இஸ்ரேலிய உளவு அமைப்பைத் தொடர்பு கொள்ளுமாறு க்யூஆர் கோடு (QR Code) உடன் கூடிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அதில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், மற்றொரு வகை பிரசுரத்தில் லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. “ஹிஸ்புல்லாக்களுக்குத் துணை நின்றால், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் ஏற்படும்; அதாவது முழுமையான அழிவைச் சந்திக்க நேரிடும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“>

ஏற்கனவே காசாவில் இதே போன்ற துண்டுப் பிரசுரங்களை வீசி எச்சரிக்கை செய்த பின்னரே இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல் கையாளும் இந்தத் துண்டுப் பிரசுர யுக்தியும், அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பத் தொடர்புகளும் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author