சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முதல் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 2,731 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அவர் வெற்றி அறிவிக்கப்பட்டார்.இந்த வெற்றி, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு முதல் வெற்றியாக அமைந்துள்ளது.
மேலூர் தொகுதியில் கடும் போட்டி எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஸ்வநாதனின் வெற்றி கூட்டணிக்கு ஆரம்ப நம்பிக்கையை அளித்துள்ளது.தேர்தல் ஆணைய அதிகாரிகள், மேலூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததை அடுத்து, விஸ்வநாதனை வெற்றியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த வெற்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் திமுக கூட்டணியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 62 மையங்களில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மேலூர் தொகுதியில் கிடைத்த முதல் வெற்றி, இன்றைய முழு முடிவுகளுக்கான ஆரம்ப சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.
