அமெரிக்கா தனது 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் 200 க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. நகர திட்டமிடல் துறையின் கூற்றுப்படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குச் சீட்டுகளில் ஆங்கிலம் தவிர மற்ற நான்கு மொழிகள் இடம்பெற்றிருக்கும்.
இந்த பட்டியலில் இந்திய மொழி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது ஹிந்தி மொழி அல்ல, மாறாக பெங்காலி ஆகும்.
NYC தேர்தல்கள் வாரியத்தின் நிர்வாக இயக்குனர், மைக்கேல் ஜே ரியான் கூற்றுப்படி,”நாங்கள் ஆங்கிலம் தவிர மற்ற நான்கு மொழிகளுக்கும் சேவை செய்ய வேண்டும். இது சீனம், ஸ்பானிஷ், கொரியன் மற்றும் பெங்காலி ஆகியவை ஆசிய மொழிகளாகும்,” என்கிறார்.
நியூயார்க்கின் வாக்குச்சீட்டுகளில் இடம்பெற்றுள்ள இந்திய மொழி இதுதான்!
