தவெக வின் முதல் வெற்றி…கீதா ஜீவனை வீழ்த்திய ஸ்ரீநாத்!

Estimated read time 0 min read

தூத்துக்குடி : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையில், தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்ட நடிகர் ஸ்ரீநாத், திமுக அமைச்சர் கீதா ஜீவனை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இந்தத் தொகுதியில் சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்ரீநாத் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் 15,971 வாக்குகள் முன்னிலையில் இருந்த நிலையில், இறுதியில் பெரும் வெற்றியைப் பெற்றார்.

தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் வலிமை மிக்க தலைவர்களில் ஒருவரான அமைச்சர் கீதா ஜீவனை தோற்கடித்த ஸ்ரீநாத்தின் வெற்றி, தவெகவினரிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தொகுதி முழுவதும் தவெக கொடிகள், விசில் ஒலிகள் மற்றும் வெற்றிக் கோஷங்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

நடிகராக பிரபலமான ஸ்ரீநாத், இந்தத் தேர்தலில் தவெக சார்பில் முதல் முறையாக களமிறங்கி, திமுகவின் வலுவான தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது கட்சிக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த வெற்றி, தவெகவின் எழுச்சியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், தூத்துக்குடி தொகுதியில் ஸ்ரீநாத்தின் வெற்றி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author