ஹோலி பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில் மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
அவர்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தும், கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு, அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வண்ணங்களின் பண்டிகையான ஹோலி, நமது உறவுகளை புதுப்பிக்கவும், வசந்த காலத்தை வரவேற்கவும் ஒரு முக்கியமான தருணமாக உள்ளது. இது வாழ்க்கையின் கொண்டாட்டத்தையும், இயற்கையின் தனித்துவமான அழகையும் உள்ளடக்கியதாகும்.
ஹோலி என்பது நமது உறவுகளை வலுப்படுத்தவும், வெறுப்புகளை அழிக்கவும், புதிய மற்றும் துடிப்பான தருணங்களைத் தழுவவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
ஹோலியின் வண்ணங்கள் நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், நல்ல எண்ணத்தையும் நிரப்பும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.