மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க்கில் 9 மாதங்களுக்கு முன்பு திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலை கடந்த வாரம் இடிந்து விழுந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்டார்.
“இன்று நான் என் கடவுள் சத்ரபதி சிவாஜி மகாராஜிடம் தலை வணங்குகிறேன், மன்னிப்பு கேட்கிறேன்,” என்று அவர் வெள்ளிக்கிழமை பால்கரில் ஒரு பேரணியில் உரையாற்றினார்.
“சிவாஜி மகராஜை தங்கள் தெய்வமாகக் கருதுபவர்கள் மற்றும் மிகவும் புண்படுத்தப்பட்டவர்கள், நான் தலை வணங்கி அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் தெய்வத்தை விட பெரியது எதுவுமில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
