சுதந்திரம் மற்றும் அமைதியை நாடும் தூதாண்மை அணுகுமுறையைக் கொண்ட சீன வெளியுறவுக் கொள்கைக்கு உலக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. சிஜிடின் ஊடகம் மற்றும் ரென்மின் பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பில் 83.5 விழுக்காட்டினர் சீன வெளியுறவுக் கொள்கை மேலும் நியாயமான மற்றும் ஏற்புடைய உலக ஒழுங்கை ஏற்படுத்துவதற்கு உதவி புரியும் என்று தெரிவித்துள்ளனர்.
மனிதகுல பொது எதிர்கால சமூகம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை உள்ளிட்ட உலகளாவிய முன்மொழிவுகளைச் சீனா முன்வைத்துள்ளது. இதன்மூலம், உலக நிர்வாகமானது விரிவான கலந்தாய்வு, இணைந்து பங்களிப்பது மற்றும் பயன்களைப் பகிர்வது ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்ற பார்வையைச் சீனா வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் செழிப்பான சாதனைகளுக்கு 91.1 விழுக்காட்டினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். உலக வளர்ச்சி முன்னெடுப்பின் மூலம் உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும் மனிதர்களின் மகிழ்ச்சியை நனவாக்க முடியும் என்றும் 84.5 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். சீனா, அமெரிக்கா உறவானது பரஸ்பர மதிப்பு மற்றும் சரிசமமான அணுகுமுறையில் இருக்க வேண்டும் என்று 91.2 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துக் கணிப்பில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 31,980 பேர் பங்கேற்றனர்.
இதனிடையே, கொந்தளிப்பான சூழலில் உள்ள உலகுக்கு அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சியைக் கொண்டு வரும் வலிமையான ஆற்றலாக சீனா திகழும் என்று வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.